நாளை மறுநாள் மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளார்.
நாளை மறுநாள் தொடக்கம் எதிர்வரும் 17ஆம் நாள் வரை, சிறிலங்கா அதிபர் மலேசியாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, அவர் மலேசிய அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பான பேச்சு நடத்துவார்.
அத்துடன் சுற்றுலா, விவசாயம், பெருந்தோட்டத்துறை, கலாசாரம், இளைஞர் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்த உடன்பாடுகளும் இந்தப் பயணத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன.
இதற்கிடையே சிறிலங்கா அதிபரின் மலேசியப் பயணத்துக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய சென்றிருந்த போது அவருக்கு எதிராக, தமிழ் அமைப்புகள் போராட்டங்களை நடத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.