மேலும்

ஐ.நா பொதுச்செயலராகப் பதவியேற்றார் அன்ரனியோ குரெரெஸ்

General Assembly  Appointment of the Secretary-General of the United Nations.புதிய ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குரெரெஸ் (வயது-67) நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இவர் ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச்செயலராவார்.

கடந்த பத்தாண்டுகளாக ஐ.நா பொதுச்செயலராக இருக்கும் பான் கீ மூனின் பதவிக்காலம், எதிர்வரும் 31ஆம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே, புதிய ஐ.நா பொதுச்செயலராக நேற்று அன்ரனியோ குரெரெஸ் பதவியேற்றார்.

எனினும், இவர் தனது பணிகளை வரும் 2017 ஜனவரி 1ஆம் நாளே ஆரம்பிப்பார்.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் புதிய ஐ.நா பொதுச்செயலர் பதவியேற்றார்.

General Assembly  Appointment of the Secretary-General of the United Nations.

ஏழு பெண்கள் உள்ளிட்ட 12 பேர் ஐ.நா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்ட போதிலும், கடந்த ஒக்ரோபர் மாதம் அன்ரனியோ குரெரெஸ் ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் பொதுச்சபையினால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த அன்ரனியோ குரெரெஸ், 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையராகவும் பதவி வகித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *