திருச்சி வழியாக கொழும்பு திரும்பும் சிறிலங்கா அதிபர் – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவின் கோவா மாநிலத்துக்குச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திருச்சி வழியாக கொழும்பு திரும்பவுள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




