மேலும்

பிரிக்ஸ், பிம்ஸ்ரெக் மாநாடுகளில் சிறிலங்கா அதிபர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

நேற்று கோவாவில் பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் தனித்தனியான மற்றும் கூட்டான சந்திப்புகள் இடம்பெற்றன.

பிம்ஸ்ரெக் அமைப்பில் சிறிலங்கா அங்கம் வகிக்கும் நிலையில், கோவாவில் நேற்று நடந்த இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

இந்தியா, நேபாளம், பூட்டான், மியான்மார், தாய்லாந்து, பங்களாதேஸ் ஆகிய ஏனைய உறுப்பு நாடுகளினதும் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

brics-bimstec-meet-2brics-bimstec-meet-3

அதேவேளை, பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களும், பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களும் கூட்டாகவும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார்.

இந்தச் சந்திப்புகளில் தீவிரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதில் ஒன்றிணைதல், மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்தே முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

maithri-aung-san-sukhyi

அதேவேளை, பூட்டான் பிரதமர் மற்றும மியான்மார் வெளிவிவகார அமைச்சர் ஆங் சான் சூகி ஆகியோரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாகச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *