மேலும்

இராவணன் பயங்கரவாதியா? – மோடிக்கு எதிராக ராவண பலய போர்க்கொடி

ravana-balayaஇராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

லக்னோவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி  பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன், இப்போது பயங்கரவாதம் என்ற புதிய வடிவில்  வந்திருக்கிறான் என்று கூறியிருந்தார்.

இந்தியப் பிரதமரின் இந்தக் கருத்துக்கு சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ராவண பலயவின் தலைவர், சத்ததிஸ்ஸ தேரர்,

‘இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராவண பலய  சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

இதுதொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு கையளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *