சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.
வரப்போகும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியுமா என்று தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் உதய கம்மன் பில ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
வவுனியாவில் நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயகநாதன், ஒலிவாங்கியை வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தினார்.
யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் விமானப்படையினர் ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் என்ற மனிதாபிமான உதவி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் என்று, இந்திய ஊடகவியலாளர் நீனா கோபால் எழுதி, வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம்.
காணாமற்போனோர் பணியக சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னர், இந்தப் பணியகத்துக்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.