மேலும்

மாதம்: August 2016

மிக் ஆவணங்கள் காணாமற்போனமை குறித்து முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை

மிக்-27 போர் விமானங்களின் கொள்வனவு தொடர்பான மூல ஆவணம் காணாமற்போனமை குறித்து, 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவியில் இருந்த முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

அணிசேரா உச்சி மாநாடு, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்கு செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் தமிழீழத்தை நீக்கினார் சிறிலங்கா தூதுவர் ஸ்கந்தகுமார்

அவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, சிறிலங்கா தூதரகத்தின் அழுத்தத்தின் பேரிலேயே நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அமைச்சர்களுடன் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச்செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று சிறிலங்கா அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காணாமற்போனோர் பணியக சட்டத்துக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினர் போராட்டம்

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி, தேசிய போர் வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையில் சிறிலங்கா படையினர் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரியை விடுவிக்குமாறு கோரிக்கை

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது.

கொழும்பு அனைத்துலக நிதி நகரம் – சீனாவுடன் முத்தரப்பு உடன்பாடு கைச்சாத்து

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய முத்தரப்பு உடன்பாடு கொழும்பில் நேற்றுக் கையெழுத்திடப்பட்டது.

இன்று மீண்டும் சீனா செல்கிறார் ரணில் – அடுத்தமாதம் மைத்திரி பயணம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே பிரதமர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காணாமற்போனோர் பணியக சட்டமூலத்தை நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு அமெரிக்கா பாராட்டு

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.