மேலும்

நாள்: 9th August 2016

நாளையுடன் ஓய்வு பெறுகிறார் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வுபெறவுள்ளார். இவரைக் கௌரவிக்கும் வகையில் இன்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராப்போசன விருந்து அளிக்கப்படவுள்ளது.

காணாமற்போனோர் பணியகம் சிறிலங்கா படையினருக்கு எதிரானது அல்ல – மனோ கணேசன்

காணாமற்போனோர் தொடர்பான பணியகம், சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரானதாகப் பயன்படுத்தப்படாது என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உதவிச் செயலரும் கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவிச் செயலர், சார்ள்ஸ் எச்.றிவ்கின் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பில் முக்கிய பேச்சுக்களில் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான், நேற்று சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

78 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 தமிழ் அரசியல் கைதிகள், நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அனுமன் பாலம் – சிறிலங்கா மீதான இந்தியாவின் நேரடிப் படையெடுப்பு

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதன் மூலம், சிறிலங்கா மீது இந்தியா நேரடியான படையெடுப்பு நடத்த முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.