மேலும்

மாதம்: August 2016

மென்சக்தியின் செல்வாக்கு குறித்து ஆராய்கிறது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்குத் தொடரில், இந்த ஆண்டுக்கான கருத்தரங்கு, எதிர்வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.

போரின் இறுதியில் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் இடம்பெற்றன – பரணகம ஆணைக்குழு

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதால், நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், ஐ.நாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடும் என்று காணாமற்போனோர் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

மைத்திரி – ரணில் பிரிவு எந்த இடத்தில் சாத்தியம்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர்.   முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார்.

நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்க நேரிடும் – மைத்திரி எச்சரிக்கை

கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பெருநகர அபிவிருத்தி, துறைமுக கட்டுமான நிபுணத்துவ உதவிகளை வழங்க சீனா இணக்கம்

பெருநகர மற்றும் துறைமுக கட்டுமானம் தொடர்பான தமது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை சிறிலங்காவுக்கு வழங்க, சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் லி ஜியான்ஹோங் இணங்கியுள்ளார்.

முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க மருத்துவர்கள் – அரசாங்கம் நிராகரிப்பு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளைப் பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க மருத்துவர்கள் தேவையில்லை என்று, சிறிலங்காவின் சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகிந்த அணியினர் 8 பேரின் அமைப்பாளர் பதவிகள் பறிப்பு

மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் எட்டுப் பேரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார்.

அமைதித் தீர்வுக்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரே வழி – விக்னேஸ்வரன் செவ்வி

நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு வழி என வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவரின் யாழ். பயணத்தால் வடக்கு மக்களுக்கு நன்மையில்லை – சி.வி.கே

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பின் யாழ்ப்பாண பயணம், வட மாகாண மக்களுக்கு எந்த நன்மையையும் தரவில்லை என்று, வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் விளைவுகளை விரைவில் எதிர்கொள்வார் கோத்தா – சரத் பொன்சேகா எச்சரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இரண்டு முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 90 வீதம் முடிந்து விட்டதாகவும், அதன் விளைவுகளை அவர் விரைவில் எதிர்கொள்வார் என்றும், சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.