மேலும்

நாள்: 25th August 2016

நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தை வலுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படும், நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சிறிலங்காவின் அரச, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க உயர்அதிகாரி முக்கிய பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட், சிறிலங்கா அரசாங்க மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தினார்.

காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரை

புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன நேற்று இந்தத் தகவலை வெளியிட்டார்.

திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் இந்திய முதலீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

திருகோணமலையில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா படையினரின் வசமுள்ள நிலங்கள் சுவீகரிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.