மேலும்

நிழல் அமைச்சரவையில் பிரதமர் மகிந்த, வெளிவிவகார அமைச்சர் நாமல்

mahinda-naml-mp (1)சிறிலங்காவின் கூட்டு எதிரணியினர் நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்திருப்பதாகவும், அதன் பிரதமராக மகிந்த ராஜபக்ச செயற்படுவார் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, புத்தசாசன, மத விவகாரங்களுக்கான நிழல் அமைச்சராகவும் மகிந்த ராஜபக்சவே செயற்படுவார் என்றும், கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.

50 பேர் கொண்ட நிழல் அமைச்சர்களின் பட்டியலையும் கூட்டு எதிரணி இன்று வெளியிட்டுள்ளது,

இந்த நிழல் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக நாமல் ராஜபக்சவும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தனவும், போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக சமல் ராஜபக்சவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராக உதய கம்மன்பிலவும் செயற்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சராக டலஸ் அழகப்பெருமவும், துறைமுகங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சராக குமார வெல்கமவும், நிதி அமைச்சராக பந்துல குணவர்த்தனவும், வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவன்சவும் நிழல் அமைச்சரவையில் செயற்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *