குற்றங்களை எதிர்த்து போராடுவதில் ஒத்துழைப்பு- ரஷ்யாவுடன் சிறிலங்கா உடன்பாடு
ஊழல், இணையவழிக் குற்றம் மற்றும் பிற குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாட்டில் சிறிலங்காவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன.
நேற்று முன்தினம் மாலை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவும், ரஷ்ய அசட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சனும் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்தச் சந்திப்பில், இருதரப்பு சட்ட ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஊழல், இணையவழிக் குற்றம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் ஏற்படும் சவால்களையும், அவற்றை எதிர்கொள்ள நெருங்கிய ஒத்துழைப்பின் அவசியத்தையும் இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.
இணையவழிக் குற்றம், பணச்சலவை, பயங்கரவாதம் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிக்கான வழிமுறைகளை நிறுவுவதையும் ரசட்டமா அதிபரின் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

