மேலும்

இன்றும் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா – வாழ்த்த வருவாரா கருணாநிதி?

jayalalithaதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, இன்று ஆறாவது தடவையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், இந்த பதவியேற்பு விழா இன்று மதிய 12 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தமிழ்நாடு மாநில ஆளுனர் ரோசய்யா முன்பாக, முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொள்வார் ஜெயலலிதா.

அவரையடுத்து, புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர்.

இந்த விழாவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கும், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், காங்கிரஸ் கட்சிக்கோ அதன் தலைவர்களுக்கோ, அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதால், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *