மேலும்

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சம்பூர் அனல்மின் திட்டப் பணிகள்

sampoorசம்பூர் அனல் மின் திட்டப் பணிகளை நிறுத்துவதற்கோ, இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றுவதற்கோ, இந்தியாவின் அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழகம், எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பூர் அனல் மின் திட்டப் பணிகளை நிறுத்துமாறு தமக்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்றும் எனவே அதற்கான பணிகளைத் தாம் முன்னெடுத்து வருவதாகவும், திருகோணமலை மின் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் பிரவீன் சக்சேனா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கப்பல்களில் மூலப்பொருட்களை எடுத்து வருவதைக் கவனத்தில் கொண்டே, சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல்கள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கே வரமுடியும் என்றும், திருகோணமலைத் துறைமுகம் அவற்றுக்குப் பொருத்தமானதல்ல என்றும், இலங்கை மின்சார சபையின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அனல்மின் திட்டப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக மின்சாரசபைத் தலைவர் அனுர விஜேபாலவும் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *