மேலும்

பந்து இப்போது சிறிலங்காவிடம் – என்கிறார் ரஷ்ய தூதுவர்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் விடயத்தில் பந்து இப்போது சிறிலங்காவிடமே உள்ளதாக சிறிலங்காவுக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ஜகரியன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மாலை ரஷ்ய நாளை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர்,

சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷாவின் சிறிலங்காவிற்கு வருகை தந்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

சிறிலங்காவிற்கு எண்ணெய் வழங்க ரஷ்யா தயாராக உள்ளது.  இது தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவுகள் தற்போது பரிசீலனையில் உள்ளன.

ஆனால் இறுதி முடிவு சிறிலங்காவ கையில்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *