மேலும்

கொழும்பில் அமெரிக்க கடற்படை வாத்திய அணியின் இசை நிகழ்ச்சிகள்

US Navy 7th Fleet Bandசிறிலங்காவில் பொது இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியின் வாத்திய அணி கொழும்புக்கு வந்துள்ளது.

வரும் 26ஆம், 27ஆம் நாள்களில், அமெரிக்க கடற்படை வாத்திய அணியினர், கொழும்பில் பல்வேறு இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

இலவசமாகவே இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அமெரிக்க தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமடைந்த பின்னர், கலாசார ரீதியான பிணைப்பை வலுவாக்கும் திட்டத்தின் கீழ், அமெரிக்க கடற்படையின் வாத்திய அணி கொழும்பு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *