மேலும்

யாழ்ப்பாணத்தில் தேசிய சாரணர் ஒன்றுகூடலை ஆரம்பித்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

maithri-jambory (1)ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுனர் ரெஜினோல்ட் குரே, மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நூற்றாண்டு கண்ட யாழ்ப்பாண சாரணர் வரலாற்றில், முதல் முறையாக, தேமசிய சாரணர் ஒன்று கூடல், இம்முறையே இடம்பெறுகிறது.

இந்த ஒன்றுகூடலில், நாடெங்கும் இருந்து சுமார் 8000 சாரணர்களும், அவர்களின் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர்.

maithri-jambory (1)maithri-jambory (2)maithri-jambory (3)

அத்துடன், இந்தியா, பங்களாதேஸ், நேபாளம், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த சுமார் 200 சாரணர்களும் இந்த ஒன்று கூடலில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஒன்றுகூடல் வரும் 26ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.

ஒரு கருத்து “யாழ்ப்பாணத்தில் தேசிய சாரணர் ஒன்றுகூடலை ஆரம்பித்து வைத்தார் சிறிலங்கா அதிபர்”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    இது எல்லாம் இனப்பிரச்சினை தீர்வை மழுங்கடிக்க செய்யும் செயல்பாடா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *