மேலும்

யாழ்ப்பாணத்தில் நேற்று திடீரென 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை

thermometer-hot-weatherயாழ்ப்பாணத்தில் நேற்று வழக்கத்தை விடவும் 4 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை நேற்று பதிவானதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சிறிலங்காவில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் வழக்கத்தை விடவும், அதிகமாக 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அம்பாந்தோட்டை, கட்டுகஸ்தோட்டை, மன்னார், மற்றும் திருகோணமலையில் வழக்கத்தை விடவும், 3 பாகை செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை காணப்பட்டது.

அனுராதபுர, மட்டக்களப்பு, குருநாகல, மகாஇலுப்பல்லம, புத்தளம், இரத்மலான, வவுனியா, பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், வழக்கத்தை விட சற்று அதிகமான வெப்பநிலை காணப்பட்டது.

இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்தை விட சுமார் 2, 3 பாகை செல்சியஸ் அதிகமாகவே காணப்பட்டது.

திடீரென வெப்பநிலை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் நேற்று வெளியில் நதடமாட முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *