மேலும்

மாதம்: October 2015

மகசின் சிறையில் உண்ணாவிரதம் இருந்த 8 அரசியல் கைதிகள் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதி

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில், எட்டுப் பேர் நேற்றிரவு உடல் நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் இராணுவ ஆலோசகராகிறார் மேஜர் ஜெனரல் உபய மெடவெல

சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் படைகளின் தலைமையகத் தளபதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் உபய மெடவெல, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் சென்றார் ரணில் – பொருளாதார முதலீடுகளை பெறுவதே திட்டம்

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் போது, அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் அவர் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.

ரவிராஜ் படுகொலை தொடர்பாக கருணாவிடம் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மகிந்தவின் எதிர்ப்பினால் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தரப்பு சட்டவாளர்கள் தெரிவித்த எதிர்ப்பினால், அவரிடம் இன்று நடத்தப்படவிருந்த விசாரணைகள் நாளைக்குப் பிற்போடப்பட்டுள்ளன.

அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் வாக்குறுதியை ஏற்க அரசியல் கைதிகள் மறுப்பு

சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், தமிழ் அரசியல் கைதிகளுடன் பேச்சு நடத்தினார்.

‘யாரும் என்னைக் கைது செய்ய முடியாது’ – என்கிறார் கருணா

தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவிடம் இன்று விசாரணை – கைது செய்யப்படக் கூடும் என்று பரவலாக வதந்தி

அதிபர் தேர்தல் பரப்புரைக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பிய கட்டணத்தைச் செலுத்த தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இன்று நிதிமோசடிகள் குறித்து  விசாரிக்கும் அதிபர் ஆணைக் குழுவினால் விசாரிக்கப்படவுள்ளார்.

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்களுக்கு கூட்டமைப்பே காரணம் – வாசுதேவ குற்றச்சாட்டு

சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக அழுத்தங்கள் வலுப்பெற்றதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, போர்க்குற்ற விவகாரத்தை கூட்டமைப்பு அனைத்துலக மயபப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மோசமடையும் அரசியல் கைதிகளின் உடல்நிலை – சிறிலங்கா அரசு பாராமுகம்

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த  தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.