கொழும்பில் சிறுபான்மை வேட்பாளர்களை ஓரம்கட்டியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு உரிய இடமளிக்காமல் ஓரம்கட்டியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு உரிய இடமளிக்காமல் ஓரம்கட்டியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுவைக் கையளிக்க குருநாகல மாவட்டச் செயலகத்துக்கு வரவில்லை.
வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று மட்டும், 11 அரசியல் கட்சிகளும், 09 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரா என்பது தொடர்பில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கட்சி தாவியுள்ளனர்.
பத்து ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமையானது சிறிலங்காவின் அரசியலில் திருப்பம் ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் புரிந்துணர்வு உடன்பாடு, இன்று காலை அலரி மாளிகையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கு உலக வங்கி அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் உள்ளடக்குவதற்கு, மகிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட அட்மிரல் வசந்த கரன்னகொட உள்ளிட்டோரின் பட்டியலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.