மேலும்

நாள்: 7th July 2015

லண்டனில் துடுப்பாட்டப் போட்டியில் பந்து தாக்கி யாழ்ப்பாண வீரர் மரணம்

பிரித்தானியாவில் துடுப்பாட்டப் போட்டியின் போது, நெஞ்சில் பந்து தாக்கி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் மரணமானார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை லண்டனில் உள்ள சுரே மைதானத்தில் இடம்பெற்றது.

ராஜீவைத் தாக்கிய கடற்படை சிப்பாய் பிஜேபியின் தலைமை வேட்பாளராகப் போட்டி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கம்பகா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.

மைத்திரி அரசின் முடிவினால் சீனா மகிழ்ச்சி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை விரிவாக்கும் திட்டத்துக்கு சிறிலங்காவின் துற்போதைய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து சீனா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

‘செக்’ வைக்கும் மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம் – மகிந்த அணி அவசர கூட்டம்

மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதில் இருந்து தானாகவே ஒதுங்கச் செய்வதற்கான திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டியிடாமல் இருப்பது நல்லது – மகிந்தவுக்கு தொலைபேசியில் கூறினார் மைத்திரி?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தொலைபேசி மூலம் தெரிவித்ததாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது கைகளில் இரத்தக்கறைகள் இல்லையாம் – சந்திரிகா கூறுகிறார்

தனது கைகளில் இரத்தக்கறைகள் படியவில்லை என்பதால், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மற்றெல்லோரையும் விட கூடுதலான தகைமைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

20 ஆசனங்களைக் குறிவைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மைத்திரியை மிரட்டும் மகிந்த – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் புதிய நெருக்கடி

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிப்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் புதிய இழுபறி தோன்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிட இடமளிக்கிறார் ஆனந்தசங்கரி

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில், முன்னாள் போராளிகளும் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி சார்பில் 23 பேர் போட்டி- அதிகாரபூர்வமாக அறிவித்தார் சம்பந்தன்

வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களிலும் உள்ள, 29 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 44 வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தவுள்ளது.