கோத்தா படுகொலை முயற்சி – குற்றத்தை ஒப்புக்கொண்ட மைத்திரிக்கு 6 மாத சிறைத்தண்டனை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், சிங்களவர் ஒருவருக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், சிங்களவர் ஒருவருக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா மற்றும் மியான்மார் ஆகிய இரண்டு ஆசிய நாடுகளிலும் வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின் பெறுபேறுகள் ஆசியப் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.
அக்குரஸ்ஸவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரையில், ஆதரவாளர் ஒருவரை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆவேசமாகத் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு சீனா ஆதரவளித்து வருவதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க, 40 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் அழைக்கவுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது, அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீன நிறுவனம் ஒன்று 149 மில்லியன் ரூபாவை வழங்கியது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவில் நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கு, தற்போதுள்ள அரசியலமைப்பின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியலமைப்பு ஒன்றே அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்டக் கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு நேற்றுத் தெரிவித்தது.