மேலும்

நாள்: 20th July 2015

மகிந்தவை பிரதமராக நியமிக்காவிடின் செங்கோலைக் கைப்பற்றுவோம் – எச்சரிக்கிறது மகிந்த அணி

மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்கா விட்டால், செங்கோலைத் தூக்கிக் கொண்டு, தாம் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசநாயக்க.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – ராஜபக்சக்களைத் தாக்குகிறார் கருணா

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார்.

கேள்விக்குறியாகும் சிறிலங்காவின் எதிர்காலம் – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானமானது பெரியளவில் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றல்ல.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் முயற்சிகளை தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் 19 – படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நாளாக பிரகடனம்

வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் பொதுவாக நினைவு கூரும் நாளாக, ஒக்ரோபர் 19ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

50 போர்க்குற்றவாளிகளின் பட்டியலுடன் ஐ.நாவின் போலி போர்க்குற்ற அறிக்கை – வெளிவரப் போகிறது

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அனுதாப அலையைத் தோற்றுவிக்கும் நோக்கில், போலியான ஐ.நா போர்க்குற்ற அறிக்கை ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகல தேர்தல் பரப்புரைகளில் போர்வெற்றி உணர்வுக்கு உசுப்பேற்றுகிறார் மகிந்த

குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அங்குள்ள சிறிலங்கா படையினர் மற்றும், முன்னாள் படையினர், உயிரிழந்த படையினரின் குடும்பங்களின் வாக்குகளை இலக்கு வைத்தே பரப்புரைகளை ஆரம்பித்துள்ளார்.