மேலும்

நாள்: 19th July 2015

எஞ்சிய பகுதிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவம் மறுப்பு – மகிந்த கொடுத்துள்ள உற்சாகம்

வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதைகளை விடுவிப்பதற்கும், உறுதியளிக்கப்பட்ட எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கும் சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் மூன்று விசுவாசிகளை தேசியப்பட்டியலில் இருந்து கடைசிநேரத்தில் நீக்கினார் மைத்திரி

மகிந்த ராஜபக்சவினால் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட மூவரின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில், நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது கொழும்பு ஆங்கில வாரஇதழ்.

அடிவாங்கிய கோத்தாவின் உயிரைக் காப்பாற்றிய மேர்வின் சில்வா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைத் தாமே ஒருமுறை காப்பாற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

சிறிலங்காவின் பெயரையும், தேசியக் கொடியையும் மாற்றப் போகிறதாம் பிஜேபி

சிறிலங்காவின் பெயரையும், தேசியக் கொடியையும் மாற்றியமைப்பதற்கு தாம் நடவடிக்கை எடுப்போம் என்று பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பிஜேபி) உறுதி அளித்துள்ளது.

மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு கோத்தாவிடம் ஒப்படைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரி அரசில் உள்ள சுதந்திரக் கட்சியினரை பதவி விலகுமாறு மகிந்த தரப்பு அழுத்தம்

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை பதவி விலகும் படி, மகிந்த ராஜபக்ச தரப்பினரால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த அரசின் முறைகேடு குறித்து விசாரிக்க அவுஸ்ரேலியாவிடம் உதவி கோருகிறது சிறிலங்கா

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு அவுஸ்ரேலிய சமஷ்டி காவல்துறையின் உதவியை சிறிலங்கா காவல்துறை நாடியிருக்கிறது.

மூன்று ஆண்டுகளில் 785 மில்லியன் ரூபாவை விமானப் பயணங்களுக்காகச் செலவிட்ட மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்காக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களை 785 மில்லியன் ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து போரிட்ட இலங்கையர் சிரியாவில் விமானத் தாக்குதலில் பலி

ஐஎஸ்Iஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுடன் இணைந்து போரிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியர் ஒருவர் சிரியாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.