மேலும்

நாள்: 23rd July 2015

ஆயுள்தண்டனைக் குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு

கொலை, வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

வெள்ளை வான் விவகாரம் – மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் 4 மணிநேரம் விசாரணை

மீரிஹான பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் வெள்ளை வான் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தனது விரல்களைப் பாதுகாக்க சும்மா தள்ளிவிட்டேன் என்கிறார் மகிந்த

தனது கைவிரலைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவரைச் சும்மா தள்ளி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தீவிர அரசியல் பரப்புரையாக மாறியுள்ள வெள்ளை வானும் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கியும்

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வானுடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி, மற்றும் அவரது மெய்க்காவலர்கள் மீரிஹானவில் பிடிபட்ட விவகாரம் சிறிலங்கா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாராகும் மகிந்தவின் விசுவாசிகள்

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், விரைவில் தமது பதவிகளை விட்டு விலகலாம் என்று, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்தவை முந்தினார் ரணில் – அரச பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் இருபிரதான கட்சிகளும், அரச பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்துள்ளன.

துறைமுகநகரத் திட்டத்தை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு, சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக, வெளியான தகவல்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.

வெள்ளை வான் சர்ச்சையில் வெளிவரும் புதிய தகவல்கள்

மிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு  கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்தது என்றும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றில் மனு

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடும்படி கோரி, எமது சிறிலங்கா சுதந்திர முன்னணி என்ற அரசியல் கட்சியின் செயலர் சாகர காரியவசம், மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.