மேலும்

நாள்: 31st July 2015

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பில், இன்று நண்பகல் ஐதேகவின் தேர்தல் பரப்புரையார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஐதேக ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, 12 பேர் காயம்

கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.

சிறிலங்காவிலும் கொண்டாடப்பட்ட சீன இராணுவத்தின் ஆண்டுவிழா

சீனாவில் மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட 88 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் சிறிலங்காவிலும் இடம்பெற்றுள்ளன.  கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் நாள்) கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி விடுதியில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

மகிந்த பிரதமராவதால் இந்தியாவுக்கு என்ன பாதகம்?

ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராகினாலும் கூட, இவர் அதிபராகப் பதவி வகித்த போது செயற்பட்டது போன்று பலமுள்ள ஒருவராகத் தன்னைக் காண்பிக்க முடியாது.  

ஐ.நா – சிறிலங்கா இடையே இரகசிய இணக்கப்பாடு இல்லை என்கிறார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

சனல் 4 ஊடகம் குறிப்பிட்டது போல, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏதும் இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

மைத்திரி அணியினரை தோற்கடிக்க நரிகளாக மாறி ஊளையிடும் மகிந்த அணியினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களைத் தோற்கடிக்க, அவர்களின் பரப்புரையை ஊளையிட்டுக் குழப்பும் புதிய உத்தியை மகிந்த ராஜபக்ச அணியினர் கையாளத் தொடங்கியுள்ளனர்.

சமஸ்டியை நிராகரித்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழமுடியாது – மாவை சேனாதிராசா

வடக்கு,கிழக்கு இணைந்த சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும், அரசியல்தீர்வு கிடைக்காவிட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகி விடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் ராஜபக்சவினரைக் காப்பாற்ற முடியாது – ராஜித சேனாரத்ன

போர்க்குற்றங்களுக்காக ராஜபக்சவினரை அனைத்துலக விசாரணைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என்றாலும், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்திருந்தால் அவர்களைக் காப்பாற்றப் போவதில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.