மேலும்

நாள்: 4th July 2015

ஜனவரி 8 புரட்சி தடம் புரள இடமளியேன் – என்கிறார் மைத்திரி

ஜனவரி 8ஆம் நாள் நடந்த அமைதிப் புரட்சி தடம் புரள்வதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் முடிவினால் சுதந்திரக் கட்சியினர் பலர் ஐதேகவுக்கு தாவத் திட்டம்

மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் ஐதேகவில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுகிறார் மகிந்த?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் – இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு வேட்புமனு – மற்றொரு குத்துக்கரணம் அடிப்பாராம் மைத்திரி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவை அனுமதிப்பது தொடர்பான விடயத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றொரு குத்துக்கரணம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு நுழைவிசைவு மறுத்தது அமெரிக்கா

சிறிலங்காவின் முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதியும், பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

33 நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்களை சந்தித்தார் மைத்திரி

வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்படவுள்ள இராஜதந்திரிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர்களின் முன்னோடிப் பட்டியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களின் முன்னோடிப் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.