மேலும்

நாள்: 27th July 2015

இந்தியா, அமெரிக்காவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, அமெரிக்காவும் இந்தியாவும், இன்னும் தெளிவானதும், காத்திரமானதுமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

அப்துல் கலாம் காலமானார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (வயது 84) சற்று முன்னர் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சற்றுமுன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் காலில் விழும் மைத்திரியின் ஆதரவாளர்கள்

மாத்தளையில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்றதே தமிழ்த் தேசியம் – யதீந்திரா

இன்று பல அரசியல்வாதிகளும் அர்த்தம் விளங்காமல் உச்சரித்துவரும் தமிழ்த் தேசியம் என்பது, இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்ற ஒன்று. இது குறித்து இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரான அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

“எங்கள் வாக்கு சிங்கள பௌத்தருக்கே” – தெற்கில் தூண்டப்படும் இனவாதம்

கேகாலை மாவட்டத்தில் இனவாதத்தைத் தூண்டும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்  ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை – என்கிறார் மகிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வைக் கோரினாலும், நாட்டைப் பிரிக்க ஐக்கிய மக்கள் கூந்திர முன்னணி இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சிசிர மென்டிஸ் நாளை பதவியேற்கிறார்

ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது பதவியை ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் மேடையில் ஏறிய மைத்திரியின் அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்

மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான கலை மற்றும் கலாசார அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அவமானப்பட நேர்ந்துள்ளது.

வடக்கில் சட்டவிரோத சுவரொட்டிகளாம் – 1980களின் நிலை திரும்புவதாக எச்சரிக்கிறார் கோத்தா

வடக்கில் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இந்த நிலை நீடித்தால், அங்கு 1980களில் ஏற்பட்ட நிலை ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.