மேலும்

சுதந்திரமான நீதி முறைமையை கொண்டுள்ளதாம் சிறிலங்கா – மெச்சுகிறார் இராணுவப் பேச்சாளர்

Brigadier-Jayanath-jayaweeraமிருசுவில் படுகொலை வழக்கில் இராணுவ அதிகாரியான சுனில் இரத்நாயக்கவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை, சுதந்திரமானதும், அசாதாரணமானதுமான நீதி முறைமையைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

”குற்றச் செயல்கள்,  வன்முறைகள், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால், எந்தவொரு ஆயுதப்படையினருக்கு எதிராகவும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயங்காது.

சிறிலங்காவின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பைப் கொண்ட இராணுவத்துக்கு ஒழுக்கம் மிக அவசியம்.

இந்தச் சூழலில் சமூக விரோதிகளுக்கும், சட்டத்தை மீறுவோருக்கும் இடமில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *