மேலும்

மாதம்: April 2015

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மைத்திரி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – இரா.சம்பந்தன்

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

வடக்கு மாகாண முதல்வருடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பு

நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐ.நா உதவிச் செயலர் சிறிலங்காவுக்கு வருகிறார்

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் ஹோலியாங் சூ சிறிலங்காவுக்கு இந்தவாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரவிராஜ் கொலையாளிகளில் ஒருவர் முன்னாள் கடற்படைத் தளபதியின் தனிப்பட்ட உதவியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று சிறிலங்கா கடற்படையினரில், ஒருவர், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் தனிப்பட்ட உதவியாளர் என்று தெரியவந்துள்ளது.

வீண்சுமையை ஏற்படுத்தியுள்ள மகிந்த ராஜபக்சவின் ஆடம்பரத் திட்டங்கள்

சிறிலங்காவில் இது தொடர்பாக முன்னர் கேள்வியெழுப்பியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவர். ஏனெனில் மகிந்த ராஜபக்ச அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தார்.இவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர்,  மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் சிறிலங்கா விழித்துக் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் கணினி அறிவு புள்ளிவிபரங்கள் – இரண்டாம் இடத்தில் வடக்கு மாகாணம்

சிறிலங்காவின் சனத்தொகையில்,  5 வயதுக்கும், 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில், நான்கில் ஒருவர் கணினி அறிவு கொண்டவர்களாக இருப்பதாகவும், ஒவ்வொரு 100 வீடுகளிலும், 22 வீடுகளில், தலா ஒரு கணினியாவது இருப்பதாகவும், அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் தூதரகம் அமைக்க சீனா ஆர்வம் – தமிழ்நாட்டின் மீது திரும்புகிறது கவனம்

தமிழ்நாட்டுடனான வர்த்தக, கலாசார உறவுகளை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய,  இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லீ யூசெங், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை – ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதி

சிறிலங்காவுக்கான வர்த்தக கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும், வரிச்சலுகைகளை மீள வழங்குவது குறித்தும், ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமான மீள் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெவிட் டலி தெரிவித்துள்ளார்.

கால் நூற்றாண்டுக்குப் பின் தலைமன்னார் – கொழும்பு தொடருந்துச் சேவை இன்று ஆரம்பம்

கால் நூற்றாண்டுக்குப் பின்னர், சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான நேரடி தொடருந்துச் சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.