மேலும்

மாதம்: April 2015

இறுதிப் போரில் உயிர்நீத்தோருக்கு அமெரிக்கா சார்பில் முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம்

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார்.

கொழும்பு வந்து சேர்ந்தார் ஐ.நா உதவிச் செயலர்

ஆறு நாள் பயணமாக ஐ.நா உதவிச்செயலர் ஹோலியாங் சூ இன்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளார். இன்று மாலை 5 மணியளவில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த படை அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை

அமெரிக்க பயிற்சித் திட்டங்களில் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு, வாய்ப்பளிப்பது தொடர்பான கொள்கையை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்று, சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.

சிங்களக் கல்வியாளரின் பார்வையில் சிறிலங்கா பிரதமரின் யாழ்ப்பாணப் பயணம்

தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபையையும் அதன் முதலமைச்சரையும் ஓரங்கட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாட முடியும் என பிரதமர் கருதினால், இவர் சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் விட்ட மோசமான அதே தவறுகளை மீண்டும் இழைக்கிறார்.

புலிகளிடம் மீட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை?

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் ஆபிரிக்காவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனாவின் 28 முதலீட்டுத் திட்டங்களை சிறிலங்கா மீளாய்வு

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அளிக்கப்பட்ட 35 முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ய சிறிலங்கா அரசாங்கம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களின் திட்டங்களாகும்.

நாளை மறுநாள் பாகிஸ்தான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் பாகிஸ்தானுக்கு தனது முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

தலாய்லாமாவுக்கு நுழைவிசைவு மறுக்கும் சிறிலங்கா – சீனா வரவேற்பு

திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவு வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சீனா வரவேற்புத் தெரிவித்துள்ளது.

வடக்கில் கைத்தொழில் வலயங்களை உருவாக்க சீனா விருப்பம் – இந்தியாவுக்குப் போட்டி

சிறிலங்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில், கைத்தொழில் அல்லது பொருளாதார வலயங்களை நிறுவ சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஜியாங்லியாங் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.