மேலும்

யேர்மனியில் தமிழாலயம் பள்ளிகளை உருவாக்கிய இரா.நாகலிங்கம் ஆசிரியர் காலமானார்

nagalingamயேர்மனியின் தமிழ் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஆசிரியர் நேற்றுமுன்தினம் முற்பகல் 10 மணியளவில் காலமானார்.திரு. நாகலிங்கம் தன் சொந்த முயற்சியால் யேர்மனியில் உள்ள ஹேகன் நகரில் 1986ல் தமிழ் பாடசாலை ஒன்றை நிறுவினார்.

ஆரம்பத்தில் அதில் 10 மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.  மூன்று ஆண்டுகளில் தன் அயராத உழைப்பினால் யேர்மனியில் 1989ஆம் ஆண்டு 13 பாடசாலைகளை நிறுவியிருந்தார்.

இவரே முதன்முதலில் தமிழ் பாடசாலைகளுக்கு பொது தேர்வினை யேர்மனியில் 1989ல் செயல்படுத்தினார்.

திரு.நாகலிங்கம் அவர்களை யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரிவின் பொறுப்பாளராக இக்காலக்கட்டத்தில் அறிவித்தது.

1990களில் இருந்து திரு. நாகலிங்கம் அவர்கள் தமிழ் மற்றும் கலாச்சார பாடசாலைகளை ஒன்றிணைத்து “தமிழாலயம்” பள்ளிகளாக உருவாக்கினார்.

nagalingam

அதன் பிறகு திரு. நாகலிங்கம் அவர்கள் யேர்மனி மற்றும் ஐரோப்பா கண்டம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ் மொழி கல்வியை கொண்டு சேர்க்க உழைத்தார்.

இப்பொழுது யேர்மனியில் 130 மேற்பட்ட தமிழாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 6500 மாணவர்கள் பயிலுகின்றனர். இப்பள்ளிகளை நிர்வகிக்க 350 அலுவலர்களும், 650 ஆசிரியர்களும் உள்ளனர்.

வசாவிளானை பிறப்பிடமாக கொண்ட  திரு. நாகலிங்கம், தனது ஆசிரியர் 1979ல் யேர்மனிக்கு புலம்பெயர்வதற்கு முன்னர் மாட்லெய், பெரதேனியா, ஹட்டன், உரும்பிராய் ஆகிய இடங்களில் ஆசிரியர் சேவையை செய்தார்.

திரு. நாகலிங்கம் ஒரு நாடக கலைஞர், இலங்கை தீவில் நிறைய மேடைகளில் தனது நாடக கலைகளை அரங்கேற்றியுள்ளார்.

யேர்மனியில் தமிழை வளர்ப்பதற்காக, அங்கு 130 மேற்பட்ட தமிழாலயங்களை உருவாக்கி புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி, கலை, பண்பாட்டை வளர்த்தமைக்காக  திரு.நாகலிங்கம், தாயகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரின் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனால் மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.

திரு. நாகலிங்கம்  “தமிழாலயத்தின் தந்தை” என்றும் “தமிழ் மொழியின் பாதுகாவலர்”, ”தமிழேந்தல்” என்றும் யேர்மனி மற்றும் ஐரோப்பா கண்டத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் இவரை கெளரவிக்கின்றனர்.

அத்துடன் யேர்மனியில் வாழும் தமிழ்மக்கள் சார்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிக்கிளை அவரின் பணியினைப் பாராட்டி ஈழப்பெருந்தமிழன் என்னும் விருதினை வழங்கி மதிப்பளித்திருந்தனர்.

ஒரு கருத்து “யேர்மனியில் தமிழாலயம் பள்ளிகளை உருவாக்கிய இரா.நாகலிங்கம் ஆசிரியர் காலமானார்”

  1. esan says:

    he lived ln inuvil ,married and has a house too. but by inuvil matters blackedout?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *