மேலும்

கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் இன்று இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படுகிறது

ki-pi-annaகடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த புதினப்பலகை ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான, கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் உடல் இன்றும் நாளையும் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது.

பிரான்சில் உள்ள, Centre hospitalier Victor Dupouy, 69 rue du Lieutenant – colonel Prudhon, 95107 Argenteuil, என்ற முகவரியில், கவிஞர் கி.பி அரவிந்தன் அவர்களின் உடல் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படும்.

ஐரோப்பிய நேரப்படி பிற்பகல் 2 மணி தொடக்கம், 5 மணி வரை கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

நாளை வியாழக்கிழமையும், பிற்பகல் 2 மணி தொடக்கம், 5 மணி வரை, அதே முகவரியில், அன்னாரின் உடல் பார்வைக்காக வைக்கப்படும்.

அதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்ற முகவரியில், அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இதனிடையே, கவிஞர்.கி.பி அரவிந்தனின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தும், அவரது நினைவுகளைப் பகிர்ந்தும், உலகின் பல பாகங்களிலும் வாழும், தமிழர்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *