மேலும்

மகிந்த நடத்தியது சர்வாதிகார ஆட்சி – அமெரிக்க உயரதிகாரியின் கருத்து

US Department of State Regional Affairs' deputy director Neil Kromashசிறிலங்காவில் ஜனநாயகத்தை மீளமைப்பதற்கும், இனப்பதற்றத்தின் காயங்களை ஆற்றுவதற்கும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கொல்கத்தா நகரில், நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிராந்திய விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நீல் குரோமஸ், இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில், சிறிலங்காவில் நீண்டகாலமாக இருந்து வந்த சர்வாதிகார ஆட்சி தூக்கியெறியப்பட்டு புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து அங்கு, சாதகமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

US Department of State Regional Affairs' deputy director Neil Kromash

ஜனநாயகத்தை மீளமைக்கவும், இனப்பதற்றத்தின் காயங்களை ஆற்றுவதற்கும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *