இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வடமாகாண சபையை முடக்கப் பார்த்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் சிறிலங்காவை விட்டுத் தப்பி ஓடமாட்டேன் என்றும், தொடர்ந்து நாட்டிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை, மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைத்துள்ளார் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரச வளங்களின் பயன்பாடு மற்றும், இராணுவத் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள பௌத்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.ராஜபக்ச மற்றும் திரு.மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் முஸ்லீம் மக்களினதும் தமிழ் மக்களினதும் வாக்குகள் மிக முக்கியமானவை என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்தும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஏற்படக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும், அனைத்துலக சமூகம் கவலை கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.