மைத்திரியின் அமைச்சரவை இன்று நியமனம்
சிறிலங்காவின் புதிய அமைச்சரவையை, அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவின் புதிய அமைச்சரவையை, அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதிபர் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்து விட்டுத் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட சதித்திட்டம் குறித்து, புதிய அரசாங்கம் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே உள்ளதாகவும், தானே கட்சியின் தலைமைப் பதவியை வகிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றுமாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச, இன்று அதிகாலை தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, செய்திகள் வெளியாகிய போதிலும், அவர் தொடர்ந்தும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசித்து வந்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான – இரண்டு மூத்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில், சர்ச்சைக்குரிய பங்கு வகித்து வந்த திறைசேரியின் செயலர் பி.பி.ஜெயசுந்தர, தேர்தலுக்கு முதல் நாளே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.