மேலும்

கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது சீன நீர்மூழ்கி

chinese-submarrine-colomboகொழும்புத் துறைமுகத்தில் ஒரு வாரமாகத் தரித்து நின்ற சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும், போர்க்கப்பலும், நேற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனக் கடற்படையின், சங்செங்- 2  என்ற நீர்மூழ்கியும், சங்சிங்டாவோ என்ற போர்க்கப்பலும், கடந்தமாதம் 31ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்திருந்தன.

இவை கொழும்புத் துறைமுகத்தில், சீனாவுக்குச் சொந்தமான கொள்கலன் முனையத்தில் கடந்த ஆறு நாட்களாகத் தரித்திருந்தன.

நேற்று இவையிரண்டும், கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

“2010ம் ஆண்டுக்குப் பின்னர்,பல்வேறு நாடுகளின் 238 போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் சங்செங்-2 நீர்மூழ்கி.

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் சங்செங்-2 நீர்மூழ்கி.

சீன நீர்மூழ்கி அல்லது போர்க்கப்பலின் இந்தப் பயணங்களால் பிராந்திய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாது.

எரிபொருள் நிரப்புவதற்காகவும், மாலுமிகள் ஓய்வெடுப்பதற்காகவுமே, சீன நீர்மூழ்கிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எந்த வெளிநாட்டுப் போர்க்கப்பல்களையும் வரவேற்பது சிறிலங்கா கடற்படையின் வழக்கம்.

இது, அனைத்துலக பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கியான சங்செங்- 2 தரித்து நிற்கும் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்றை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *