மேலும்

அதிபர் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பை வரும் 19ம் நாள் வெளியிடுகிறார் மகிந்த

அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 19ம் நாள் வர்த்தமானி மூலம் வெளியிடுவார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டாவது முறை பதவியேற்று, வரும் 19ம் நாளுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.

அதன் பின்னர், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியும்.

இந்தநிலையிலேயே, வரும் 19ம் நாள், அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்படும் என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்லை நடத்தும்படி தேர்தல் ஆணையாளரைக் கோரும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதும், தேர்தலுக்கான நாளை தேர்தல் ஆணையாளரே தீர்மானிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மூன்றாவது தடவையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று சிறிலங்கா உயர்நீதிமன்றிடம், நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விளக்கம் கோரியிருந்தார்.

வரும் 10ம் நாளுக்கு முன்னதாக, இந்த விளக்கத்தை சமர்ப்பிக்கும் படியும் அவர் கேட்டுள்ளார்.

இதையடுத்து, நாளைக்கு முன்னதாக, இதுதொடர்பான கருத்துக்களை முன்வைக்கலாம் என்று உயர்நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதன் பின்னர், ஏழு பேரைக் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து சிறிலங்கா அதிபருக்கு சட்டவிளக்கத்தை அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *