மேலும்

Tag Archives: மனித உரிமைகள்

ஜெனிவாவில் மூன்று நாட்கள் நடக்கவுள்ள சிறிலங்கா குறித்த விவாதங்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் 22ஆம் நாள் சிறிலங்கா குறித்த ஐ.நாமனித உரிமை ஆணையாளரின்  அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்ளுங்கள் அவுஸ்ரேலிய பிரதமரே….

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பாக மட்டுமல்லாது, விளையாட்டு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் பணியாற்ற ஆறரை இலட்சம் டொலர் தேவை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்பாடுகளை சிறிலங்காவில் இந்த ஆண்டு முன்னெடுப்பதற்கு ஆறு இலட்சத்து 48 ஆயிரம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குறித்த தீர்மானத்தை பிரித்தானியாவே முன்வைக்கும் – ஜெனிவாவில் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறை பிரித்தானியா முன்வைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்துடன் முதல் அதிகாரபூர்வ பேச்சுக்களை தொடங்கியது சிறிலங்கா

அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன், சிறிலங்கா அரசாங்கம் நேற்று முதல்முறையாக அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா

பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் மற்றொரு தீர்மானமா? – சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கும் முயற்சிகளைப் பிற்போடச் செய்வதற்காக, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த வொசிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஜெனிவாவில் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது சிறிலங்கா

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜெனிவாவில் காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்று, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து உரையாற்றவுள்ளார்.

சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது

சிறிலங்காவில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் நீடிப்பதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிராகரித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் பதில் அறிக்கையை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.