கவிழும் நிலையில் கிழக்கு மாகாணசபை – ஆறு உறுப்பினர்கள் ஆதரவை விலக்கினர்
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.
கொழும்பிலும், திருகோணமலையிலும், தமிழ் இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்கவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
கொழும்பில் கப்பம் கோரிக் கடத்திய 28 தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்த, மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹபிஸ் நசீர் அகமத் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்த வாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வரும் ஜனவரி 8ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வடக்கிலும், கிழக்கிலும் உள்ள களநிலவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.