மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரையா? – மறுக்கிறது சீனா
மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வகையில் சீனா பரப்புரையில் இறங்கியுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் நிராகரித்துள்ளது.
மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வகையில் சீனா பரப்புரையில் இறங்கியுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் நிராகரித்துள்ளது.
அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு நாளை வேட்பு மனுவில் கையெழுத்திடுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ள போதிலும், இன்னமும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிப்பது குறித்து, நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனசவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டுள்ளதால் மகிந்த – மைத்திரி ஆதரவுத் தரப்பினரிடையே புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் வந்திருந்ததாகவும், இவர் இரகசியமாக வேட்புமனுவில் கையெழுத்திட வந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சந்திரிகா குமாரதுங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் முன்வைத்துள்ள யோசனையால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்திய நீண்ட பேச்சுக்களை அடுத்து, வேட்பாளர் பட்டியலில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடிவு செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, அதற்காக பல நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதில் இருந்து தானாகவே ஒதுங்கச் செய்வதற்கான திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.