சிறிலங்காவுக்கு முதலாவது ரோந்துக் கப்பலை வழங்கியது ஜப்பான்
சிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்கியுள்ள 30 எம் வகை ரோந்துப் படகு நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவினால் இயக்கி வைக்கப்பட்டது. ரோக்கியோவில் உள்ள சுமிதகாவ கப்பல் கட்டும் தளத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.




