சிறிலங்கா பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமனம்
சிறிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமாக நாளை சீனாவுக்குச் செல்லவுள்ள நிலையில், பதில் பாதுகாப்பு அமைச்சரை அவர் நியமிப்பாரா என்ற கேள்வி அரசியல், இராஜதந்திர வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினர் அழித்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா கோரியுள்ளது.
சீனாவின் உலங்குவானூர்தி மற்றும் கப்பல் தயாரிப்புத் துறை முதலீட்டாளர்கள் குழுவொன்று அம்பாந்தோட்டையில் முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்பு குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளது.
சிறிலங்காவுடன் பரந்துபட்ட – ஆழமான நடைமுறை ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்படாது, அதனை சிறிலங்காவே கையாளும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் அபிவிருத்தி வலயம் ஒன்றையும், இறப்பர் கைத்தொழில் வலயம் ஒன்றையும், அமைப்பதில் சீன அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது.
சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுக்களை மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. அடுத்த மாதம் அமைச்சர்கள் மட்டத்திலான இந்தப் பேச்சுக்கள் தொடங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.