சிறிலங்காவுடன் பரந்த– ஆழமான ஒத்துழைப்புக்கு சீனா தயார்
சிறிலங்காவுடன் பரந்துபட்ட – ஆழமான நடைமுறை ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் நிதியுதவியுடன், அமைக்கப்பட்ட மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான தொடருந்துப் பாதையில் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங்,
“சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியில் மாத்தறை- பெலியத்தை தொடருந்துப் பாதை கட்டப்பட்டது. இது தென்பகுதிக்கான பயணத்தை இலகுபடுத்தியுள்ளதுடன் உள்ளூர் பொருளாதாரம், சமூக அபிவிருத்திக்கு பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
பாதை மற்றும் அணை முயற்சித் திட்டத்தின் கீழ், சிறிலங்கா மக்களுக்கு மேலும் நன்மைகளைத் தரக் கூடிய வகையில், பரந்துபட்ட – ஆழமான நடைமுறை ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு சீனா தயாராக இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.