மேலும்

நிலந்த ஜயவர்தன காவல்துறை சேவையில் இருந்து நீக்கம்

சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின்  (SIS) முன்னாள் தலைவர்,  மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, காவல்துறை சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொத்துவிலில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தை அகற்ற கோரிக்கை

பொத்துவிலில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் யூத வழிபாட்டு தலமான சபாத் இல்லத்தை (Shabad House) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா விமானப்படைத் தளம் அகற்றப்படாது

வவுனியா விமானப்படைத் தளத்தை சிறிலங்கா அரசாங்கம் அகற்றவுள்ளதாக வெளியான தகவல்களை சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

100 நாடுகளின் அங்கீகாரத்துடன் புதிய ஓட்டுநர் அனுமதிப் பத்திரம்

100 வரையான நாடுகளில் அங்கீகரிக்கப்படும் புதிய டிஜிட்டல் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை  அறிமுகப்படுத்த, சிறிலங்காவின்  மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்  நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதானிக்கு 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக, அதானி குழுமம் மேற்கொண்ட  ஆரம்ப செலவுகளுக்காக, சிறிலங்கா 300 தொடக்கம் 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானத்துக்கு முயற்சி

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைப் பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானப் பணிக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை- மட்டு. மாநகரசபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை

தனது பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறும், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு,   கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடன்பாடுகளை மீறுகிறது அமெரிக்கா- ரணில் சீற்றம்

அமெரிக்கா, அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழு உடன்பாடுகளை மீறுவதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.