உடன்பாடுகளை மீறுகிறது அமெரிக்கா- ரணில் சீற்றம்
அமெரிக்கா, அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழு உடன்பாடுகளை மீறுவதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் மீது திடீர் வரிகளை விதிப்பதன் மூலம், கடனாளிகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதை கடினமாக்குவதன் மூலம், அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழு உடன்பாடுகளை அமெரிக்கா மீறுகிறது.
அமெரிக்கா அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளது.
அமெரிக்கா, மொத்த நிதி தேவை (GFN) உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி அவர்கள் இப்போது எங்களுக்கு உதவ வேண்டும்.
அவர்கள் உடன்பாட்டை மீறுகிறார்கள். பத்திரதாரர்களுக்கு நாங்கள் திருப்பிச் செலுத்துவதை அவர்கள் தடுக்கிறார்கள்.
நாங்கள் பத்திரதாரர்களிடம் அமெரிக்காவுக்குச் சென்று பணத்தை வசூலிக்கச் சொல்ல வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திடம் சொல்ல வேண்டும்.
தற்போதைய நிர்வாகம் ட்ரம்ப் வரியைக் குறைப்பதில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஏனெனில் 30 சதவீதத்துடன் நாம் வாழ முடியாது.
இருப்பினும், அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட திடீர் வரிகளால் சிறிலங்கா இப்போது திட்டமிடப்படாத பொருளாதார அபாயங்களை எதிர்கொள்கிறது.
இது உலக வர்த்தக அமைப்பின் மரபுகளையும் மீறுகிறது.
அதிபர் ட்ரம்ப் இப்போது சுதந்திர வர்த்தகத்தையும் உலகளாவிய விதிகள் அடிப்படையிலான ஒழுங்கையும் மாற்றி வருகிறார் என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.