மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – என்ன சொல்கிறார்கள் இவர்கள்…?

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கைக்கு- அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

நிச்சயமாக உச்சநீதிமன்றம் செல்வோம் – மங்கள சமரவீர

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றில் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது – மகிந்த தேசப்பிரிய

உச்சநீதிமன்றத்தின்  கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தை நாடும் ஐதேக – அலரி மாளிகையில் குவிந்த ஆதரவாளர்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரு ஜெயசூரிய விரைவில் பதிலளிக்க வேண்டி வரும் – எச்சரித்த மைத்திரி

அரசியலமைப்புக்கு எதிராகச் செயற்பட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய விரைவில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – அமெரிக்கா ஆழ்ந்த கவலை

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு – ஜனவரி 05இல் தேர்தல்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும்,  2019 ஜனவரி 05ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று  இரவு வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் – இந்தியா நம்பிக்கை

சிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமாரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய  கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – நாமல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.