மேலும்

பைத்தியக் காரன், கொடுங்கோலன் என்று மைத்திரியை விமர்சித்த மங்கள

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக் காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.

வீணையிலேயே ஈபிடிபி போட்டி – தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி

மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும், தமது கூட்டாளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கில் அவர்களின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

தேர்தல் விடயத்தில் பசில் விடாப்பிடி – கண்டியிலேயே தங்கிவிட்ட மைத்திரி

நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அதன் நிறுவுனரான பசில் ராஜபக்ச அடம்பிடித்து வருவதால், மைத்திரி- மகிந்த கூட்டணி இடையே முரண்பாடுகள் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசி சமரச முயற்சியையும் நிராகரித்தார் மைத்திரி – மனோ கணேசன்

அரசியல் நெருக்கடியைத் தீர்க்க நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சிகளையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னால் இருந்த புலனாய்வு அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளின் சங்கமம்

இன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்த ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாடியதுடன், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ஐதேக, கூட்டமைப்பு, ஜேவிபி உச்சநீதிமன்றம் செல்கின்றன

அரசியலமைப்பை மீறி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

சிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக பின்தொடர்கிறோம் – அமெரிக்க உயர் அதிகாரி

நிச்சயமாக சிறிலங்காவின் நிலைமைகளை நாங்கள் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வருகிறோம் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் நடவடிக்கை – பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா அதிர்ச்சி

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து  பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றைக் கலைக்க சிறிலங்கா அதிபர் முடிவெடுத்தது ஏன்?

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்தார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.