மேலும்

மேலும் 5 அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு

சிறிலங்கா அரசியலில் முதல் முறையாக – இரண்டு வாரங்களில் 11ஆவது தடவையாக இன்று மாலையும் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்பு  இடம்பெற்றுள்ளது.

நித்திகைக்குளத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர் உலங்குவானூர்தி மூலம் மீட்பு

முல்லைத்தீவு – அலம்பில், நித்திகைக்குளம் பகுதியில், சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட  ஆறு விவசாயிகளை சிறிலங்கா விமானப்படையினர், இன்று உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.

மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நொவம்பர் 5ஆம் நாளிடப்பட்டு, வெளியிட்டுள்ள அரசிதழிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மைத்திரியை நீக்கும் பிரேரணைக்கு மனோ கணேசன் எதிர்ப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அதனை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எமது வாக்குகளை கண்ணியமாகப் பயன்படுத்துவோம்- ரவூப் ஹக்கீம்

எமது வாக்குகளை கண்ணியமான முறையில் பயன்படுத்துவோம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல துருப்புச்சீட்டுகளை இறக்கி விளையாடுவேன் – எச்சரித்த மைத்திரி

தான் இப்போது ஒரே ஒரு துருப்புச்சீட்டை மாத்திரமே பயன்படுத்தியிருப்பதாகவும், இன்னமும் பல துருப்புச்சீட்டுகள் தமது கைவசம் இருப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

ரணிலை அகற்றுவதற்காக ஒன்றிணைந்த மகிந்த – மைத்திரி தரப்புகளிடையே உரசல்கள் ஆரம்பம்

ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்  அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

12 முஸ்லிம் எம்.பிக்கள் மக்காவுக்குப் பயணம் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் மாலை சந்தித்து விட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

200 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு – விசாரிக்காமலேயே நிராகரித்தது நீதிமன்றம்

சிறிலங்கா மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர், தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றம்  நிராகரித்துள்ளது.