மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைக்கு சிறிலங்கா இணக்கம் – தீர்மானத்துக்கும் இணை அனுசரணை

கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு தரப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை நடத்த வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அனைத்துலக தலையீடு இல்லாத விசாரணையை ஏற்கோம் – அமெரிக்காவிடம் சுமந்திரன் தெரிவிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணை அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கத் தவறினால், அதற்கு தாம் ஒத்துழைக்கமாட்டோம் என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவை வரவேற்கிறது கூட்டமைப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன்,  நம்பகமான நீதிப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தும் வகையில், ஜெனிவாவில் நேற்று அமெரிக்கா சமர்ப்பித்துள்ள புதிய திருத்த வரைவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு சுமந்திரன் அவசர பயணம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவு கிடைப்பது உறுதி – சிறிலங்கா நம்பிக்கை

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் யோசனைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் ஆதரவு கிடைக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுகிறது இந்தியா

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையின் காரம் குறைக்கப்படவில்லை – என்கிறார் மகிந்த ராஜபக்ச

போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கோ கிடையாது என்றும், எனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா பிரதமர் ரணில்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

மூன்றாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நிறைவு

புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.